Featured Posts
- ஸ்ருதி காசனும், இன்னோர் பொண்ணும் ்
Aenean at neque vel diam feugiat tempus quis auctor nibh. Phasellus ut viverra dol...more
யாழ். பல்கலை. நிர்வாகம் தொடர்பில்
In quis felis sit amet ligula consequat aliquam vitae a arcu. Nullam et ipsum id n...more
வவுனியாவில் பச்சை நிறத்தில் மழை!
Morbi eu sodales sem. Donec gravida,nisl non luctus sollicitudin,urna magna dign...more
விஷாலின் சமர் பொங்கலுக்கு வருமா? வராதா??
Fusce dolor ligula,egestas nec eleifend quis,blandit sed lorem. Duis congue vest...more
2012 இல் கலக்கிய நடிகைகள்!
Phasellus fringilla condimentum leo ut mollis. In mauris nibh,iaculis at auctor a...more
உலகின் மூலையில் உங்கள் நண்பர்கள் எங்கிருந்தாலும், தற்போது பேஸ்புக் அப்ளிக்கேஷன் உதவியுடன் அவர்களிடம் இலவசமாக பேசலாம்.நண்பர்களுடன், அவர்கள் எந்த நாட்டிலிருந்தாலும், இலவசமாக உரையாடக்கூடிய வசதியினை சமூக வலைதளமான பேஸ்புக் விரைவில் ஆரம்பிக்க உள்ளது.பேஸ்புக்கின் ஐபோன் அப்ளிகேஷனான மெஸேன்ஜசரில் தற்போது இந்த வசதி செய்யப்பட்டு, கனடா நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸ்புக் வலைத்தளத்தில் இருக்கும் நண்பர்களுடன் எந்த நாட்டிலிருந்தாலும் இலவசமாக பேசிக் கொள்ளலாம்.தற்போது ஐபோனில் உள்ள பேஸ்புக் மெஸேன்ஜர் அப்ளிகேஷனில், நாம் பேசி அதனைப் பதிந்து குரல் அஞ்சலாக அனுப்பும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மெஸேன்ஜர் அப்ளிகேஷனில் உள்ள + குறியினை அழுத்தி நாம் பேசுவதை பதிந்து அனுப்பும் சுலப யுத்திகளும் அதில் உள்ளது.
Continue Reading
யாழ். பல்கலை. நிர்வாகம் தொடர்பில் வணிகபீட மாணவர் ஒன்றியம் ஊடகங்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்!
Posted by THILAKANS இலங்கை
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் துணைவேந்தர் பீடாதிபதிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் குறித்து மேற்கொண்டு வருகின்ற விசமத்தனமான பிரசாரங்களை நம்பி செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னர் பிரசுரிக்குமாறும் வணிகபீட மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது சம்பந்தமாக அவர்கள் வெளியிட்டுள்ள உத்தியோக பூர்வ அறிக்கை வருமாறு:
ஊடகங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
கடந்த நவம்பர் மாதம் 27ம் திகதி பல்கலைக்கழக சூழலிலும், மாணவர் விடுதிகளிலும் இலங்கை இராணுவ மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட அத்துமீறல்களைக் கண்டித்து மறுநாள் மாணவர்கள் மேற்கொண்ட அமைதிவழிப் பேரணி மீது இராணுவ மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து அன்றைய தினமே 3 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டமை மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் உட்பட ஏனைய மாணவர்களின் கைது மற்றும் அவர்களின் விடுதலை தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு சில் ஊடகங்கள் பல்கலைக்கழக துணைவேந்தர், பீடாதிபதிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகளை இலக்கு வைத்து மேற்கொண்டு வருகின்ற விசமத்தனமான செய்தி பிரசாரங்கள் பல்கலைக்கிழக மாணவர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
எமது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் விஞ்ஞானபீட மாணவர் ஒன்றிய உறுப்பினர் விசாரணைக்காக அழைக்கப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமையால் எமது கல்விச் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களின் விடுதலைக்காக பல்கலைக்கழக நிர்வாகம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என்பது தொடர்பான பூரண விளக்கம் அற்ற சூழ்நிலையில் சில ஊடகங்கள் தமக்குக் கிடைக்கின்ற சில் தகவல்களைக் கொண்டு அதனைத் திரிபுபடுத்தி சில பொய்யான, ஒன்றிற்கொன்று முரணான தகவல்களை வெளியிட்டு வருவதுடன், தமது ஊடக சுதந்திர வாய்ப்பை பயன்படுத்தி துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளினுடைய தகுதிகளை கேவலப்படுத்துகின்ற வகையிலே செய்திகளை வெளியிட்டு வருகின்றமையானது மாணவர்களிடையே ஊடகங்களின் நடுநிலைத்தன்மை தொடர்பான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது மாணவர்களின் விடுதலை தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணிவருகின்றோம் என்ற அடிப்படையில் சில விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளோம். குறிப்பாக கடந்த நவம்பர் மாதம் 27 மற்றும் 28ம் திகதிகளில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் போது பல்கலைக்கழக துணைவேந்தர் இற்கு இல்லாத சூழ்நிலையில் பதில் துணைவேந்தராக கடமையாற்றிய முகாமைத்துவ பீடாதிபதியின் செயற்பாடுகள் தொடர்பாக வெளியாகிய தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்பதுடன் அவருக்கு தனிப்பட்ட ரீதியில் களங்கத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடு என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
அன்றைய தினங்களில் பதில் துணைவேந்தர், பீடாதிபதிகள் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகவே இராணுவ மற்றும் காவல்துறையினரின் செயற்பாடுகளை ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்ததுடன் 28ம் திகதி கைதுசெய்யப்பட்ட 3 மாணவர்களும் உடனடியாக விடுவிக்கக்கூடியதாக காணப்பட்டதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களின் சரணடைதல் தொடர்பாக சில முரணான தகவல்கள் காணப்படுகின்றன. பல்கலைக்கழக மாணவர்களை நிர்வாகமே கொண்டுசென்று கையளித்ததாக கூறப்படுகின்றது. பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட பெயர்ப்பட்டியலின் அடிப்படையில் மாணவர்களுடைய பாதுகாப்பு கருதியும் பெற்றோர்களின் வேண்டுகோளின் அடிப்படையிலுமே பல்கலைக்கழக நிர்வாகம் அவர்களை விசாரணைக்கென அழைத்துச் சென்றதேயொழிய பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி அனுப்பவில்லை என்பதுடன் மாணவர்களை நிர்வாகம் கையளித்ததன் காரணமாகவே தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற மாணவர்களை விடுதலை செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேரம் பேசக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர் தொடர்பாகவும் அவரின் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஒரு சில ஊடகங்கள் வேண்டுமென்றே அவருக்கு தனிப்பட்ட ரீதியில் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கி மாணவர்களையும் பெற்றோரையும் குழப்புகின்ற செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்பதனை மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்புகளைப் பேண்வருகின்றோம் என்ற அடிப்படையில் பல்கலைக்கழக நிர்வாகமானது எத்தனையோ அழுத்தங்களுக்கு மத்தியில் சரணடைந்து விடுதலை செய்யப்பட்ட மாணவர்களின் விடுதலை தொடர்பாகவும், தடுத்து வைத்திருக்கின்ற மாணவர்களின் விடுதலை தொடர்பிலும் தங்களது இயலுமைக்கு அப்பாற்பட்ட வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமே இருக்கின்றார்கள் என்பதனை தெரிவித்துக்கொள்வதுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் தொடர்பில் செய்திகளை வெளியிடும்போது அம்மாணவ பிரதிநிதிகளின் பாதுகாப்பினையும் அவர்களின் விரைவான விடுதலையையும் கருத்தில்கொண்டு பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை வெளியிடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Continue Reading
வவுனியா மாவட்டத்தில் யக்காவௌ கிராமத்தில் நேற்று பச்சை நிறத்தில் மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 3.10 மணியளவில் இந்த மழை பெய்ததாகவும்,ஆரம்பத்தில் இளம் பச்சை நிறத்தில் மழைத்துளிகள் விழ ஆரம்பித்ததாகவும் அந்நிறம் படிப்படியாகக் குறைவடைந்துச் சென்றதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
பச்சை மழையின் போது சேகரித்த நீரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Continue Reading
விஷால் நடித்த ‘சமர்’ படம் இந்தமாதம் 28-ஆம் தேதி ரிலீஸாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் திடீரென்று அந்தப்படம் வரும் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி ரிலீஸாகும் என்று தகவல் வெளியானது. ஆனால் இப்போது பொங்கலுக்கும் ‘சமர்’ ரிலீஸ் ஆகவில்லை என்று புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
அந்தபடத்தை தயாரித்து வரும் பாலாஜி ரியல் மீடியா நிறுவனம் கடுமையான நிதிச்சிக்கலில் தவித்துக்கொண்டிருப்பது தான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தெலுங்கு படத்தயாரிப்பு நிறுவனமான இந்த நிறுவனம் தமிழில் முதல்முறையாக சிம்புவை வைத்து ‘ஒஸ்தி’ என்ற படத்தை தயாரித்திருந்தார்கள். ஆனால் அந்தப்படம் வந்த வேகத்தில் பெட்டிக்குள் சுருண்டுகொண்டது. அடுத்த படமான விமல் நடித்த ‘இஷ்டம்’ படமும் அட்டர் ப்ளாப்பானதால் இப்போது அந்த நிறுவனம் புதிதாக தயாரித்து வரும் ‘சமர்’ படத்தில் கடுமையான நிதிச்சிக்கலை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
பிரபல ஜெமினி லேப் நிறுவனத்தில் சில கோடி ரூபாய்க்கு கடன் இருக்கிறது, அதேபோல ஆனந்த் சினி சர்வீஸூக்கும் சுமார் 1 கோடி ரூபாய் 20 லட்சம் பணம் பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
“இப்படி அடுத்தடுத்து இருக்கின்ற கடன் பிரச்சனைகளை வைத்துக்கொண்டு தியேட்டர் கேட்டால் கொடுக்க முடியாது. முதலில் இருக்கின்ற கடனையெல்லாம் அடைத்து விட்டு வாருங்கள் அப்புறம் உங்கள் படத்துக்கு தியேட்டர் தருகிறோம்” என்று தமிழ்நாடு தியேட்டர் ஓனர் அசோஸியேஷன் கண்டிஷனாக கூறி விட்டதால் சமர் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.
விஷால், த்ரிஷா, திரு, யுவன்ஷங்கர்ராஜா என பெரிய காம்பினேஷன் என்பதால் இந்தப்படத்துக்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Continue Reading
2012-ல் தமிழுக்கு நிறைய புதுமுக நடிகைகள் வந்தனர். பலர் ஒரு படத்தோடு காணாமல் போனார்கள். முன்னணி நடிகைகள் படங்களும் வந்தன. நயன்தாரா, தமன்னா, ஸ்ரேயா ஆகியோருக்கு இந்த வருடம் எந்த படமும் வரவில்லை. ஆனாலும் முன்னணி நடிகைகளுக்கான இடத்தை தக்க வைத்து இருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளாகவும் இருக்கின்றனர். இரு மொழிகளிலும் பெரிய ஹீரோக்களுடன் இவர்கள் நடித்து வருகிறார்கள். இப்படங்கள் அடுத்த வருடம் ரிலீசாக உள்ளன. 2012-ல் கலக்கிய நடிகைகள் பட்டியலில் ஹன்சிகா, காஜல் அகர்வால், அமலா பால், லட்சுமி மேனன், அஞ்சலி ஆகியோர் உள்ளனர். இவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து மார்க்கெட்டை தக்க வைத்துள்ளளர்.
ஹன்சிகா நடித்து வெளி வந்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் சூப்பர் ஹிட்டானது. ஆர்யாவுடன் ‘சேட்டை, சிம்புவுடன் ‘வேட்டை மன்னன்’ ‘வாலு, கார்த்தியுடன் ‘பிரியாணி, சூர்யாவுடன் ‘சிங்கம் 2′ படங்களில் தற்போது நடித்து வருகிறார். இப்படங்கள் அடுத்த வருடம் வெளி வர உள்ளன.
காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி படம் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. ‘மாற்றான்’ படமும் வெளி வந்தது. கார்த்தியுடன் “ஆல் இன் ஆல் அழகு ராஜா” படத்தில் நடிக்க ஒப்பந்தமாயுள்ளார். இந்தி, தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன.
அமலாபால் வேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைகள், காதலில் சொதப்புவது எப்படி என்ற படங்கள் மூலம் உச்சத்துக்கு போய் உள்ளார். தெலுங்கு, தமிழில் பெரிய ஹீரோக்கள் ஜோடியாகுகின்றனர். விஜய் ஜோடியாக புதுப் படத்தில் ஒப்பந்த மாகியுள்ளார். ஜெயம் ரவி ஜோடியாக நிமிர்ந்து நில் படத்திலும் நடிக்கிறார்.
லட்சுமிமேனன் இந்த ஆண்டு கலக்கிய புதுமுக நடிகைகளில் முதல் இடத்தில் உள்ளார். இவர் நடிப்பில் வந்த முதலாவது படமான சுந்தரபாண்டியன் வெற்றி கரமாக ஓடியது. கும்கி படமும் ஹட்டானது. அஞ்சலி, ஸ்ருதி, போன்றோர் தெலுங்கில் பிசியாக உள்ளனர்.
Continue Reading
கொழும்பு – கண்டிக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள்
அடுத்த வருடம் மே மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
தெரிவித்துள்ளார்.
2013ம் ஆண்டில் நாடு முக்கிய அபிவிருத்திப் பணிகள் பலவற்றில் தடம்பதிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பஹத்ததும்பர பிரதேச சபை கட்டடத்தை இன்று (29) திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
சொத்துக்களை விற்று நாட்டை அபிவிருத்தி செய்ய தாம் ஒருபோதும் தயாரில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
முறையான வேலைத் திட்டத்தின் கீழ் நாடு அபிவிருத்தி கண்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். Continue Reading
2013ம் ஆண்டில் நாடு முக்கிய அபிவிருத்திப் பணிகள் பலவற்றில் தடம்பதிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பஹத்ததும்பர பிரதேச சபை கட்டடத்தை இன்று (29) திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
சொத்துக்களை விற்று நாட்டை அபிவிருத்தி செய்ய தாம் ஒருபோதும் தயாரில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
முறையான வேலைத் திட்டத்தின் கீழ் நாடு அபிவிருத்தி கண்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். Continue Reading
Subscribe to:
Posts (Atom)





