2012 இல் கலக்கிய நடிகைகள்!


2012-ல் தமிழுக்கு நிறைய புதுமுக நடிகைகள் வந்தனர். பலர் ஒரு படத்தோடு காணாமல் போனார்கள். முன்னணி நடிகைகள் படங்களும் வந்தன. நயன்தாரா, தமன்னா, ஸ்ரேயா ஆகியோருக்கு இந்த வருடம் எந்த படமும் வரவில்லை. ஆனாலும் முன்னணி நடிகைகளுக்கான இடத்தை தக்க வைத்து இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு திரையுலகில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளாகவும் இருக்கின்றனர். இரு மொழிகளிலும் பெரிய ஹீரோக்களுடன் இவர்கள் நடித்து வருகிறார்கள். இப்படங்கள் அடுத்த வருடம் ரிலீசாக உள்ளன. 2012-ல் கலக்கிய நடிகைகள் பட்டியலில் ஹன்சிகா, காஜல் அகர்வால், அமலா பால், லட்சுமி மேனன், அஞ்சலி ஆகியோர் உள்ளனர். இவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து மார்க்கெட்டை தக்க வைத்துள்ளளர். ஹன்சிகா நடித்து வெளி வந்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் சூப்பர் ஹிட்டானது. ஆர்யாவுடன் ‘சேட்டை, சிம்புவுடன் ‘வேட்டை மன்னன்’ ‘வாலு, கார்த்தியுடன் ‘பிரியாணி, சூர்யாவுடன் ‘சிங்கம் 2′ படங்களில் தற்போது நடித்து வருகிறார். இப்படங்கள் அடுத்த வருடம் வெளி வர உள்ளன. காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி படம் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. ‘மாற்றான்’ படமும் வெளி வந்தது. கார்த்தியுடன் “ஆல் இன் ஆல் அழகு ராஜா” படத்தில் நடிக்க ஒப்பந்தமாயுள்ளார். இந்தி, தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன. அமலாபால் வேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைகள், காதலில் சொதப்புவது எப்படி என்ற படங்கள் மூலம் உச்சத்துக்கு போய் உள்ளார். தெலுங்கு, தமிழில் பெரிய ஹீரோக்கள் ஜோடியாகுகின்றனர். விஜய் ஜோடியாக புதுப் படத்தில் ஒப்பந்த மாகியுள்ளார். ஜெயம் ரவி ஜோடியாக நிமிர்ந்து நில் படத்திலும் நடிக்கிறார். லட்சுமிமேனன் இந்த ஆண்டு கலக்கிய புதுமுக நடிகைகளில் முதல் இடத்தில் உள்ளார். இவர் நடிப்பில் வந்த முதலாவது படமான சுந்தரபாண்டியன் வெற்றி கரமாக ஓடியது. கும்கி படமும் ஹட்டானது. அஞ்சலி, ஸ்ருதி, போன்றோர் தெலுங்கில் பிசியாக உள்ளனர்.

0 comments:

Post a Comment