கார்த்தியுடன் ‘சிறுத்தை’ படத்தில் நடித்ததற்குப் பிறகு, வேறு எந்த படவாய்ப்புகளையும் தமிழில் ஒத்துக்கொள்ளாமல் இருக்கிறார் தமன்னா.
இவர் ஹிந்தி பட வாய்ப்புகளை எதிர்பார்ப்பதால்தான் தமிழ் சினிமாவில் நடிப்பதை தவிர்க்கிறார் என்று கோலிவுட் வட்டாரம் கிசுகிசுத்து வருகிறது. இது குறித்து தமன்னாவிடம் கேட்டதற்கு;
“அஜய் தேவ்கன் நடிக்கும் ஹிந்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நான் நடிக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. சில பத்திரிகைகளிலும் இதை நான் படித்தேன். அதில் அணு அளவுகூட உண்மை இல்லை. இது பற்றி யாரும் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இப்படிப்பட்ட செய்திகளை எழுதும் போது தயவு செய்து என்னிடம் கேளுங்கள். மீடியாக்களிடம் நான் எப்போதும் தொடர்பில்தான் இருக்கிறேன். எந்த வேலையாக இருந்தாலும், மீடியாக்களின் அழைப்பை நான் தவிர்ப்பதில்லை. ஹிந்தி பட வாய்ப்பு செய்தியால், தென்னிந்தியப் பட வாய்ப்புகள் பாதிக்குமா? என்பது தெரியாது.
தற்போது தெலுங்கில் பிஸியாக இருக்கிறேன். மூன்று படங்களின் ஷூட்டிங் ஒரே நேரத்தில் நடக்கிறது. அதில் கவனம் செலுத்துவதால், வேறு மொழி சினிமாக்களின் கதைகளைக் கேட்க முடியவில்லை. தமிழ் இயக்குனர்கள் பலர் என்னைத் தொடர்பு கொண்டு வருகிறார்கள். சில முன்னணி இயக்குநர்கள் காத்திருக்கிறார்கள்.
2012 வரை எந்த மொழிப் படங்களிலும் நடிக்க என்னிடம் கால்ஷீட் இல்லை. இதுதான் உண்மை. இது தவிர வரும் ஆண்டில் பெரும் தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க இருக்கிறேன்” என்றார்.

0 comments:
Post a Comment